இயேசுவே நீர் தாமே
yesuvae neer thaamae
1. இயேசுவே, நீர்தாமே என் மகிழ்ச்சியாமே நீர் என் பூரிப்பு; என் மனம் நாள்தோறும் ஆசை வாஞ்சையோடும் ஏங்குகின்றது. கர்த்தரே, உலகிலே உம்மை யன்றி வாழ்விராது, இன்பமுங் காணாது.
2. நல் மறைவின் கீழே நான் ஒதுங்க, நீரே என் அரண்மனை; சாத்தான் வர்மிக்கட்டும், எதிரி சீறட்டும், இயேசு என் துணை. திகிலும் பயங்களும் பாவ நரகக்கெடியும் இயேசுவால் தணியும்.
3. வலு சர்ப்பத்துக்கும் சாவின் பற்களுக்கும் நான் திடுக்கிடேன். லோகமே, விரோதி; நான் சங்கீதம் ஓதி தோத்திரிக்கிறேன். தெய்வக்கை என் சலுகை; இனி, சாத்தான் கூட்டத்தார்கள் மௌனம் அடைவார்கள்.
4. பொக்கிஷங்கள் யாவும் வீணும் விருதாவும்; இயேசு என் கதி லோகத்தார் இச்சிக்கும் வாழ்வோர் குமிழிக்கும் கானற்குஞ்சரி, அதை ஏன் தொடருவேன், இயேசுவோடடைந்த தாழ்வு பெரிதான வாழ்வு.
5. லோகத்தின் மினுக்கே, நீ மகா அழுக்கே. என்னைவிட்டுப் போ; பாவங்களுடைய தீழ்ப்பே, நீ மறைய வேளையாம்; இதோ இச்சையே, துன்மார்க்கமே, நீ எல்லாஞ் சமூலமாக அற்றுப் போவாயாக.
6. மனமே, நீ ஆறு, பூரிப்பாகப் பாடு. இயேசு சேர்ந்தாரே; அத்தால் எந்தப் பாடும் தித்திப்பாக மாறும். நான் உலகிலே நிந்தையும் நிஷ்டூரமும் உத்தரித்தும், இயேசுதாவே என் மகிழ்ச்சியாமே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal