இயேசு ஸ்வாமியினுடையா
yesu svaamiyinudaiyaa
1. இயேசு ஸ்வாமியினுடைய காயாங்களின் கூட்டிலே சாங்கோபாங்கமாய் மறைய ஓடிவா, என் மனமே; ஆட்டுக்குட்டிபோல் அமர்ந்து, துக்கமின்றிச் சுகமாய் இயேசுவின் மடியில் வந்து இளைப்பாறக் கடவாய்.
2. மண்ணுடன் ஒட்டாமல் ஏறு; அவரண்டை வந்திரு; அந்த மெய்ப்பொருளைத்தேடு, அழிவுள்ளதை வெறு. பல பக்தியாயிராமல், இயேசு ஒருவரையே பற்று. அவரையல்லாமல் ரம்மியங் கிடையாதே.
3. அவர் மந்தையின் ஆடாக அவரண்டையில் தரி; லோக வாழ்வை நாடாயாக, கர்த்தர் உனது கதி. மன்பொருள்கள் என்னத்துக்கு நோவுண்டாக்குகின்றன; மெய்ப் பொருளாங் கர்த்தருக்கு உன் இதயத்தைக் கொடு.
4. நீ மகிழ மனமானால். சுவிசேஷத்தைப் படி, இயேசு உன் மகிழ்ச்சியானால் உன் ஆதாயம் மிகுதி அவர் மாசில்லாத அந்தம், பரிபூரணம். எல்லாம்; செல்வம், மகிமை, ஆனந்தம், யாவும் அவரில் உண்டாகும்,
5. லோக நேசத்தை எண்ணாதே, இயேசு நற்சிநேகிதர். மண்ணாம் ஆஸ்தியை நாடாதே. மாளப்பொக்கிஷம் அவர்; தம்முடயவர்களுக்கு இங்கே தேவையானதைத் தருவார், நீ அவருக்கு உன் இதயத்தைப் படை.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal