இயேசு பாவி நேசர்தாம்
yesu paavi nesardhaam
1. இயேசு பாவி நேசர்தாம், வழிதப்பிப்போன யாரும் அவரால் திரும்பலாம், அவரால் எக்கேடும் மாறும். அவரால் ரட்சிப்புண்டாம்; இயேசு பாவி நேசர்தாம்.
2. நாம் மகா அபாத்திர்ர், அவர் கிருபை புரிந்தோர், ரட்சிப்போம் என்றாண்டவர் சத்தியமிட்டே மொழிந்தார் அவர் கிருபாசம்; இயேசு பாவி நேசர்தாம்.
3. மந்தையில் காணாதது மேய்ப்பன் கவையால் திரும்பும் பாவத்தில் விழுந்தது அவர் கையினால் எழும்பும் கெட்டுப்போக மாட்டோம் நாம்; இயேசு பாவி நேசர்தாம்.
4. அழும் பாவகிளையே தம்மண்டைக் கழைக்கிறாரே, வரும் பாவியைத் தாமே தேவப் பிள்ளையாக்குவாரே; அதை நம்பி வரலாம். இயேசு பாவி நேசர்தாம்.
5. துக்கப்பட்டென் பாவத்தை அறிவிக்க இங்கே வந்தேன், மீட்பரே, நீர் கிருபை செய்யும் அப்போமீட்பைக்கண்டேன், போயிற்றென் வியாகுலம்; இயேசு பாவி நேசர்தாம்,
6. பாவம் சிவப்பாகிலும் பஞ்சைப் போலாம், எக்கறையும் அவர் ரத்தம் கழுவும்; நீதியின் வெள்ளங்கியையும் ஈவார், அது நிச்சயம்; இயேசு பாவி நேசர்தாம்.
7. மனச்சாட்சி குத்தினால் பருவம் தீர்ந்ததென்று சொல்வார். மோசே குற்றஞ் சாட்டினால் அவர் பிணை நின்றுகொள்வார். நீங்கிற்றாக்கினை எல்லாம்; இயேசு பாவி நேசர்தாம்.
8. இயேசு பாவி நேசர்தாம், அவர் என்னையும் நேசித்தார், நானும் வந்து சேரலாம், எனக்கும் மன்னிப்பளித்தார், சாவிப்போ தாதாயமாம்; இயேசு பாவி நேசர்தாம்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal