வியாதியஸ்தர் மாலையில்
viyaadhiyasthar maalaiyil
1. வியாதியஸ்தர் மாலையில் அவஸ்தையோடு வந்தனர்; தயாபரா, உம்மண்டையில் சர்வாங்க சுகம் பெற்றனர்.
2. பற்பல துன்பம் உள்ளோறாய் இப்போதும் பாதம் அண்டினோம் ப்ரசன்னமாகித் தயவாய் கண்ணோக்குவீரென்றறிவோம்
3. விசாரம் சஞ்சலத்தினால் அநேகர் க்லேசப்பட்டனர்; மெய்ப்பக்தி அன்பின் குறைவால் அநேகர் சேர்வடைந்தனர்.
4. உலகம் வீண் என்றறிந்தும் பற்றாசை பலர் கொண்டாரே; உற்றாரால் பலர் நொந்தாலும், மெய்நேசர் உம்மைத்தேடாரே
5. மாசற்ற தூய தன்மையைப் பூரணமாய்ப் பெறாமையால், எல்லோரும் சால துக்கத்தை அடைந்தோம் பாவப் பாசத்தால்.
6. ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய் மா துன்பம் நீரும் அடைந்தீர்; எப்பாடும் பாவமும் அன்பாய் ஆராய்ந்து பார்த்து அறிவீர்,
7. உம் வார்த்தை இன்றும் பலிக்கும்; நீர் தொட்டால் சுகம் ஆவோமே, ஆரோக்கியம் எல்லாருக்கும் இம்மாலை தாரும், இயேசுவே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal