விஸ்வாசத்தோடு சாட்சி பாகர்ந்தே
visvaasathodu saatsi paagarndhae
1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே தம் வேலை முடித்தோர் நிமித்தமே, கர்த்தாவே உம்மைத் துதி செய்குவோம். அல்லேலூயா! அல்லேலூயா!
2. நீர் அவர் கோட்டை, வன்கன் மலையாம்; நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்; நீர் காரிருளில் பரஞ்சோதியாம். அல்லேலூயா! அல்லேலூயா!
3. முன் நாளில் பக்தர் நற்போராடியே வென்றாற்போல் நாங்கள் வீரராகவே பொன் க்ரீடம் பெற்றுக்கொள்வோமாகவே அல்லேலூயா! அல்லேலூயா!
4. இங்கே போராடி நாங்கள் களைத்தும், உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்; யாவரும் உம்மில் ஓர் சபை என்றும், அல்லேலூயா! அல்லேலூயா!
5. போர் நீண்டு மா கடூரமாகவே, கெம்பீரக் கீதம் விண்ணில் கேட்குமே, நாம் அதைக்கேட்டு தைரியம் கொள்வோமே. அல்லேலூயா! அல்லேலூயா!
6. செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்; மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்; சீர் பரதீசில் பாக்யம் அமையும். அல்லேலூயா! அல்லேலூயா!
7. மேலான பகல் பின் விடியும், பார்! வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்; மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார். அல்லேலூயா! அல்லேலூயா!
8. அந்தக் கூட்டம் நாற்றிசை நின்றும் த்ரியேகருக்குத் துதி பாடியும் விண் மாட்சி வாசலுள் ப்ரவேசிக்கும். அல்லேலூயா! அல்லேலூயா!
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal