வாசல்களை உயர்த்துங்க்கள்
vaasalgalai uyarthunkkal
1. வாசல்களை உயர்த்துங்கள், மகாகர்த்தாவை வாழ்த்துங்கள் ராஜாதி ராஜா வருவார், பெரிய தேவ மைந்தனார், ரட்சித்த தேவரீருக்குத் துதி, தயாபரா, ஆலோசனைக் கர்த்தா.
2. அவர் மா சாந்தமானவர், சகாயர் நீதியுற்றவர்; ராஜாவின் முடி தூய்மையே, அவர் செங்கோல் இரக்கமே, இக்கட்டை நீக்கினார் அன்பாய் புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய். துதி, மா தேவனே, பலத்த மீட்பரே.
3. இக்கர்த்தர் உட்ப்ரவேசிக்கும் போதெந்த ஊரும் தேசமும் களிக்கும், எங்கள் இதயம் அடைவதும் மெய்ப் பாக்கியம். அவர் சந்தோஷப் பொழுதே மகிழ்ச்சியை அளிப்பாரே, ஆ, தேற்றும் உமக்கே புகழ்ச்சி, கர்த்தரே.
4. வாசல்களை உயர்த்துங்கள்; நெஞ்சை அலங்கரியுங்கள் பக்தியின் குருத்தோலையும் மகிழ்ச்சியின் கிளைகளும் தெளிப்பீர், ராஜா வருவார், உங்களையும் இரட்சிப்பார், கர்த்தாவுக் கென்றைக்கும் புகழ்ச்சி துதியும்.
5. என்னண்டை, இயேசு, வாருமேன், என்வாசலைத்திறக்கிறேன். அருள் புரியும் தேவரீர் என் நெஞ்சில் தங்கக் கடவீர். மோட்ச வழியைக் காண்பிக்கும் நல் ஆவியைத் தந்தருளும், என்றைக்கும் உமக்கே புகழ்ச்சி கர்த்தரே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal