உத்தம தீர்க்கதரிசி அன்பாக
uthama theerkkadharisi anbaaga
1. உத்தம தீர்க்கதரிசி, அன்பாக பரம கல்வியைக் கற்றுக் கொடும்; பாவியை நேசிக்கும் போதகராக வந்த நீர் என்னையுஞ் சேர்த்தருளும். சர்ப்பத் தலையை உடைத்த நீர்தாமே பாவிக்கு உத்தம போதகராமே.
2. என் பிரதான ஆசாரியராக உம்மைப் பணிந்து தியானிக்கிறேன். நித்திய மீட்பரே, நீர் எனக்காக மாண்டதால் நீதிமானாக்கப்பட்டேன்; வானத்திலே நீர் என் காரிய கர்த்தர், என்றைக்கும் என்னை நீர் காக்கச் சமர்த்தர்.
3. உன்னத அரசே; உம்மைத் துதித்து, கீதங்களாலும் புகழுகிறோம், உம்மைச் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து, உமது குகைளாயிருப்போம். உமது ஜனத்தைச் சகல நாளும் காத்து விசாரித்து ராஜியம் ஆளும்.
4. என் முழு உள்ளமும் உம்மைக் கொண்டாடும், உமது நேசத்தைப் போற்றுகிறேன்; எனது நாவும் நீர் செய்ததைப் பாடும், நானும் அல்லேலூயா, ஆமேன் என்பேன். ஜீவனுடையதெல்லாம் பணிவாக ஜீவனின் கர்த்தரைப் போற்றுவதாக.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal