உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும்
un kaariyathai vaaykkappannum
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)
1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் - (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2)
2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார் - (2) உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2)
3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே) ஜெபத்தால் ஜெயம் ஜெயமே உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார் உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2)
என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர் என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)
என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (3)
Related songs
- இது தெரியாதா கேட்டதில்லையாidhu theriyaadhaa kettadhillaiyaaEvg.Albert Solomon
- இல்லாதவைகளை இருக்கிறவைillaadhavaigalai irukkiravaiEvg.Albert Solomon
- என் தனிமையில் என் வேதனையில்en thanimaiyil en vedhanaiyilEvg.Albert Solomon
- எலியாவின் தேவன் நம் தேவன்eliyaavin devan nam devanEvg.Albert Solomon · FMPB (Friends Ministry Prayer Band)