உம்மை ராஜா விசுவாச
ummai raajaa visuvaasa
1. உம்மை ராஜா விசுவாச பக்தியாய்ப் பணிகிறேன் தாழ்மையோடும் கண்ணீரோடும் தேவரீரை அண்டினேன் நீர் மண்ணான பாண்டமான என்னை அன்பாய்ப் பாருமேன்.
2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த அருள் செய்யும், கர்த்தரே; என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட மேய்ப்பரான உம்மையே சேர்வேனாக, நீர் அன்பாக என்னைப் பாரும், இயேசுவே.
3. தயவோடே நீர் உம்மோடே ஐக்கியமாம் எல்லாருக்கும் ஈவதான இன்பமான அருள் என்மேல் வரவும்; யாவும் நீரே, தேவரீரே என்னைப் பார்த்து ரட்சியும்.
4. ஆ, என் ஞானப் பொழுதான தெய்வ ஆட்டுக்குட்டியே எனதாவி உம்மைத் தாவி தேடும், மணவாளனே; பட்சத்தோடும் தயவோடும் என்னைப் பாரும், மீட்பரே.
5. ஏங்கலோடும் பணிவோடும் என்னுடைய ஆத்துமம், வாயும் நெஞ்சும் கூவிக் கெஞ்சும் சத்தம் கேட்டென் சஞ்சலம் தீர்ப்பீராக; நீர் அன்பாக என்னைப் பார்த்தால் பாக்கியம்.
6. உலகத்துப் பொய்ச் சம்பத்து மாயையும் சிங்காரமும் ஆன நல்ல செல்வம் அல்ல, நெஞ்சை அவை வாதிக்கும்; மெய் வாழ்வான நீர் அன்பான பார்வை தந்து ரட்சியும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal