தூதர்கள் விண்ணில் பாடிய
thoodhargal vinnil paadiya
1. தூதர்கள் விண்ணில் பாடிய தயாபரருக்கே துதி செலுத்து. சகல நரரின் கூட்டமே
2. மா செயல்களைச் செய்கிற பராபரனைப்போல் யார் என்றிவரை உத்தமக் கருத்தாய்ப் போற்றுங்கள்.
3. இந்நாள் வரைக்கும் நமக்குச் சுகம் அருளினார். நீங்கா இக்கட்டைத் தமது கையால் நீக்குகின்றார்.
4. நாம் செய்திருக்கும் பாவத்தைப் பாராதிருக்கிறார், தெய்வீக ஆக்கினைகளை அன்பாய் அகற்றினார்.
5. இனியும் நாம் மகிழ்ச்சியாய் இருக்க, சகல தீங்கையும் அவர் தயவாய் விலக்கியருள.
6. புவியில் சமாதானத்தை அவர் தந்தென்றைக்கும் அன்பாய் நாம் செய்யும் வேலையை ஆசீர்வதிக்கவும்.
7. தம்மோட அவர் தயவாய் இருந்து, துக்கமும் வியாகுலமுந் தூரமாய் விலகப் பண்ணவும்.
8. நாம் சாகுமாட்டுக்குங் கர்த்தர் தாம் தங்கும் கோட்டையும் நாம் சாகும்பொழுது அவர் நம் பங்குமாகவும்.
9. பிரிந்து போகும் ஆவியை மோட்சானந்தத்திலே அவர் சேர்த்ததைத் தம்மண்டை மகிழ்ச்சியாகவே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal