தூதர்கள் சந்தோஷமாக
thoodhargal sandhoshamaaga
1. தூதர்கள் சந்தோஷமாகப் பாடவே, என்னிலே நெஞ்சுதுள்வதாக. கேளுங்கள், ஆகாசமெங்கும் கிறிஸ்துவின் – பிறப்பின் கீதங்கள் முழங்கும்.
2. இன்று ரட்சகர் பிறந்தார், நமது – மீட்புக்கு மீட்பராய் உதித்தார். தேவமைந்தன் தாழ வந்தார். கடவுள்,-நமக்குள் மாந்தனாய்ப் பிறந்தார்.
3. கேட்டை நம்மை விட்டகற்ற, இன்றைக்கு- நமக்கு தாம் பிரியப்பட்ட மைந்தனைக் கொடுத்த நல்ல ஆண்டவர்,- மனிதர் சத்துராரி அல்ல.
4. தம்மை நமக்கீவாய்த் தந்து, நம்மண்மை- வேதனை எல்லாம் நீக்க வந்து மீட்பரான தேவ பிள்ளை நேசமும்- தயவும் அற்றிருப்பதில்லை.
5. தாம் நராட்களைப் பகைத்தால், அல்லது- கேட்டுக்குத் தீர்த்துக்கொண்டு வைத்தால், என் இச்சென்மமாய்ப் பிறப்பார். ஏன் அவர்,-மனிதர் பாரத்தைச் சுமப்பார்.
6. கெட்டுப்போன நமக்காகக் கஸ்தியாய்- நோவுமாய் உத்தரித்துச் சாக, ஆட்டுக்குட்டியாகத் தாமே தாழ்மையாய்-சாதுவாய் இங்கே வந்தோராமே.
7. அவர் வெகு பட்சத்தோடே ஏழையை- நீசனைப் பார்த்து, அவனோடே; என் சகோதரா, என்னாலே நோய்க்கெல்லாம்- முடிவாம் என்கிறார் அன்பாலே.
8. ஆகையால் எல்லாருமாகத் துக்கத்தைத் – தீர்ப்பாரை அண்டிக்கொள்வோமாக. நரநேசர் இவர்தாமே க்டாட்சமும் ஜீவனும் இவரால் உண்டாமே.
9. துன்பத்தால் வதைந்தபேரே, சகல-ஆனந்த செல்வத்துக்கும்நேரே போகும் வாசலும் வழியும் கிறிஸ்தல்லோ;- பாடிப்போ மிஞ்சியும், முடியும்.
10. எவனைத் தன் பாவங்குத்தி, இரவும்- பகலும் கவலைப் படுத்தி வருமோ, அவனுக்காக ரட்சகத் வந்தவர் மத்தியஸ்தராக.
11. ஏழைகைள் தாராளமாகக் கிறிஸ்தண்டை- கைகளை நீட்டுவார்களாக. இங்கே ஆத்தம்ம் பிழைக்கும் சகல- பூரண நன்மையுங் கிடைக்கும்.
12. உம்மைக்கொம்பாய் நான் பிடிப்பேன். மீட்பரே,- உம்மிலே, என்றைக்குந் தரிப்பேன்; நீர் என் ஜீவன், சாவைக்காணேன், சாபமே,- திகிலே, போ, நான் நீங்கலானேன்.
13. என் கடன் என்மேல் நிற்காது என் திரள்- பாவங்கள் அப்புறங் காணாது. யாவையுஞ் சுமந்து தீர்ப்பர், ஸ்வாமி, நீர்-தேவரீர் மா பலத்த மீட்பர்.
14. உம்மால் சுத்தமாயிருப்பேன், மா தூய- பூரண நீதியை உடுப்பேன். உம்மை மனதில்அடைப்பேன். உம்மையே – அதிலே ஆஸ்தியாகவைப்பேன்.
15. இங்கே உமக்குப்பிழைப்பேன் உம்மையே- சாவிலே பற்றிக்கொண்டணைப்பேன். அங்கே எனக்கென்றென்றைக்கும் உம் திவ்ய- பாக்கிய சமுகங் கிடைக்கும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal