சபை எக்காலும் நிர்குமே
sabai ekkaalum nirgumae
1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்துமேல் நின்றும் ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றுன்; இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் எங்கியே அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.
2. கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர்; சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்; வானமும் கொள்ளா ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே; மானிடர் உள்ளமே வீடாம்.
3. சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள்ள கற்கள் நாமும்; மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும். மா சொற்பப் பேரும் பாதத்தில் பணிந்துவேண்டல் செய்கையில், அருளும் தயவும் ஈவார்.
4. தாழ்வான ஸ்தானம் யாவிலும் ராஜாதி ராஜரைக் காண்போம் அவர் மா மேலாம் ஈவையும், ஏற்றியே போற்றியே தாழ்வோம்; அருள்வார் வாக்குதயவாம், அதே நம் ஜீவன் ஆவியும்; அவர் மா சத்தியம் கேட்போம்
5. யார் எங்குமே எம்மாந்தரும் ஆலயம் பக்தியாய் நாட; உம்மில் விஸ்வாசம் ஊன்றியும் உம் திரு வார்த்தையைக் கேட்க; உம் அடியார் உம் சீஷரே, நீரே எம் நாதர் யாவுமே; உந்தன் சாந்தி அருள்வீரே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal