ராஜன் தாவீதூரிலுள்ள
raajan thaaveedhoorilulla
1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக்கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே; மாதா மரியம்மாள் தான் பாலன் யேசுகிறிஸ்துதான்.
2. தேவனால் அனுப்பட்ட உலக ரட்சகர் தாம் அவர் வீடோ மாட்டுக்கொட்டில் தொட்டிலோ முன்னணையாம்; ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.
3. சாந்தமுள்ள கன்னி கையில் பாலனாகத் தூங்கினார்; தம் மாதாவை நோக்கிப் பார்த்து நேசத்தோடு வளர்ந்தார்; அவர் போல் கீழ்ப்படிவோம்; சாந்தத்தோடு நடப்போம்.
4. பாலகர்க்கேற்ற பாதை காட்டப் பாலனாக வளர்ந்தார்; பலவீன மாந்தன் போலத் துன்பம் துக்கஞ் சகித்தார்; இன்ப துன்ப நாளிலும் துணை செய்வார் நமக்கும்.
5. நம்மை மீட்ட நேசர் தம்மைக் கண்ணால் கண்டு களிப்போம்; அவர் தாமே நித்ய ராஜ்ய நாதர் என்று அறிவோம்; பாலரை அன்பாகவே தம்மிடத்தில் சேர்ப்பாரே.
6. மாட்டுத் தொழுவத்திலல்ல ராஜ ஆசனத்திலும் ஏழைக் கோலமாக அல்ல ராஜக்ரீடஞ் சூடியும் ரட்சகர் வீற்றிருப்பார்; பாலர் சூழ்ந்து போற்றுவார்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal