பரத்தை நாடிப்போக
parathai naadippoga
1. பரத்தை நாடிப்போக நெஞ்சே விழித்திரு, இனிப் பொய்யான லோக வாழ்வை வெறுத்திரு; சீயோனின் மேன்மையான வாசஸ் தலங்கள் காண விருப்பம் இல்லையோ? பரத்தை நாடிப்போ.
2. கட்டுண்டாயோ, அத்தாலே அஞ்சாதே ரட்சகர் தம் மரணத்தினாலே உன் க்லேசம் நீக்கினார். உன் கட்டவிழ்க்கக் கர்த்தர் ஒருவரே சமர்த்தர், அவரை நம்பாயோ? பரத்தை நாடிப்போ.
3. பிதா இரக்கமாக எதிர்க்கொண்டோடுவார். உன்னை எப்போதுமாக மேன்மைப் படுத்துவார், இரட்சகர் அளிக்கும் மெய் நீதிக்கும் கதிக்கும் நீ ஆசைப்படாயோ? பரத்தை நாடிப்போ.
4. தேவாட்டுக் குட்டியான பெரிய நேசரே, சீயோனின் பாக்யமான குடிகள் நடுவே உம்மையே தோத்திரிக்க இங்கின்னம் தாமதிக்க மனம் இருக்குமோ? பரத்தை நாடிப்போ.
5. ஆனால் என் வாஞ்சை யாவும் தெய்வீகச் சித்தத்தில் அடங்க நீர் உதவும், கர்த்தா, இவ்வுலகில் உமதழைப்புக்காக நான் காத்திருப்பேனாக. உம்மை நான் நம்பினேன், நீர் என்னை ஆற்றுமேன்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal