கிரிஸ்துயிர்த்தார் எனக்கும்
kiristhuyirthaar enakkum
1. கிறிஸ்துயிர்த்தார். எனக்கும் அவரோடு ஜீவன் உண்டு, அவரோடடியேனும் மரணத்தினின்றெழுந்து என்றும் அவர் மகிமை காண்பேன். இதென் நம்பிக்கை
2. கிறிஸ்துயிர்த்தார். அவரே சர்வத்தையும் ராஜாவாக ஆள்வார். என்னையும் அங்கே தம்மோமாள வைப்பதாக வாக்களித்தார். சொன்னதைச் செய்வார். இதென் நம்பிக்கை.
3. கிறிஸ்துயிர்த்தார். அதினால் தேவ கிருபை தெளிவு, இதையும் நம்பாமையால் தேவகனத்துக் கிழிவு. கிறிஸ்தைப் பற்றும் பாவியைத் தள்ளார்; இதென் நம்பிக்கை.
4. கிறிஸ்துயிர்த்தார். எனக்கும் அவர் மீட்புச் சொந்தமாமே. அடியேனின் ஜீவனும் அவருக்காதீனமாமே. அவர் பெலவீனனை விடார், இதென் நம்பிக்கை.
5. கிறிஸ்துயிர்த்தார். ஈங்கிஷை. பேய், உயர்வு, தாழ்வு, பாடு அவர் கையினின்றென்னை ஒருகாலும் பறிக்காது. என்னை அவர் வல்ல கை காக்கும், இதென் நம்பிக்கை.
6. கிறிஸ்துயிர்த்தார். சாவிப்போ மாளா மோட்ச மகிமையில் சேரும் வாசல் அல்லவோ. சாகையில் என் மீட்பர் கையில் ஒப்புவிப்பேன் ஆவியை, இயேசுவே என் நம்பிக்கை.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal