கர்த்தர் தான் எங்கள் துர்க்கமும்
karthar thaan engal thurkkamum
1.கர்த்தர்தான் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே; உண்டாம் இக்கட்டனைத்தையும் பொல்லாங்கனின் சினம் இப்போ மா விஷம், துஷ்டஞ் சூதையும் அணிந்து உறுமும், நிகர் புவியில் இல்லை.
2. எதற்கு நாங்கள் வல்லவர், இந்நீசர் சத்தியற்றோர்; எங்களுக்காய் வேறொருவர் போர் செய்வதற்கேற்பட்டோர் யார், இயேசு கிறிஸ்துதான். இந்தப் பலவான் எங்கள் ரட்சகர், சேனாபதி அவர், ஜெயிப்பர் அவர்தாமே.
3. விழுங்க வரும் பேய்களால் புவி நிரம்பினாலும், பயப்படோம்; கர்த்தாவினால் எதிர்த்து நிற்க மாளும். இருளின் பிரபு சீறியும், அது வெல்லப்பட்ட பேய், தள்ளுண்கத் தீர்ந்ததே; ஓர் சொல்லினால் முறியும்.
4. பகைஞர் தெய்வ வார்த்தையப் பகைத்தும் அது நிற்கும் கர்த்தர் சகாயர், அவர் கை வரந் தந்தாரிக்கும். மாற்றான்கள் யாவையும் ஜீவனைத் தானும் வாங்கினால், கேடோ; இராச்சியம் அல்லோ எங்களுக்கேயிருக்கும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal