கர்த்தாவை நல்ல பக்தியாலே
karthaavai nalla pakthiyaalae
1. கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலேயும் அவராலே அன்பாய்க் காப்பாற்றப்படுவான்; உன்னதமான கர்த்தரைச் சார்ந்தோருக்கவர் கன்மலை.
2. அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ, நாம் நித்தஞ்சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ விசாரத்தாலே நமக்குத் தீங்கதிகரிக்கிறது.
3. உன் காரியத்தை நலமாகத் திருப்ப வல்லவருக்கு நீ அதை ஒப்புவிப்பாயாக; விசாரிப்பார். அமர்ந்திரு மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர்.
4. சந்தோஷப்பிக்கிறதற்கான நாள் ஏதென்றவர் அறிவார்; அநேக நற்குணங்கள் காண அந்தந்த வேளை தண்டிப்பார் அசுப்பிலே திரும்பவும் தெய்வன்பு பூரிப்பைத் தரும்.
5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன் என்றாபத்தில் நினையாதே; எப்போதும் பாடும் நோவுமற்றோன் பிரியனென்றும் எண்ணாதே அநேக காரியத்துக்குப் பின்னாலே மாறுதல் உண்டு.
6. கதியுள்ளோனை ஏழையாக்கி மகா எளியவனையோ திரவிய சம்பன்னனாக்கி உயர்ந்த ஸ்வாமிக்கரிதே; தாழ்வாக்குவார், உயர்த்துவார் அடிக்கிறார், அணைக்கிறார்.
7. மன்றாடிப்பாடிக் கிறிஸ்தோனாக நடந்து கொண்டுன் வேலையை நீ உண்மையோடே செய்வாயாக; அப்போ தெய்வாசீர்வாதத்தைத் திரும்பக்காண்பாய்; நீதிமான் கர்த்தாவால் கைவிடப்படான்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal