என்தன் ஆத்ம நேசரே
endhan aathma nesarae
1. என்தன் ஆத்ம நேசரே, வெள்ளம் போன்ற துன்பத்தில், தாசன் திக்கில்லாமலே தடுமாறிப் போகையில், தஞ்சம் தந்து, இயேசுவே, திவ்விய மாஅர்பில் காருமேன்; அப்பால் கரையேற்றிய மோட்ச வீட்டில் சேருமேன்.
2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன்; கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன்; நீரே என்தன் நம்பிக்கை, நீர் சகாயம் செய்குவீர்; ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர்.
3. குறை யாவும் நீக்கிட, நாதா, நீர் சம்பூரணர்; திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர்; நான் அசுத்த பாவிதான், நீரோ தூயர் தூயரே; நான் அநீதி கேடுள்ளான், நீர் நிறைந்த நித்தியரே.
4. பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர் என்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவீர்; ஜீவ ஊற்றாம் இயேசுவே, என்தன் தாகம் தீருமேன், ஸ்வாமீ, என்றும் என்னிலே நீர் சுரந்து ஊற்றுமேன்
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal