ஏன் சலிப்பேன் கிறிஸ்து நிற்பார்
en salippen kiristhu nirpaar
1. ஏன் சலிப்பேன், கிறிஸ்து நிற்பார் இவ்விதப் பரம முத்தை யார் பறிப்பார். எனக்கங்கே வைத்திருக்கும் மோட்சத்தை எவன் கைக் கொள்ளையிட்டெடுக்கும்.
2. நான் நிர்வாணமாய்ப் பிறந்தேன், ஆஸ்தியும் எதுவும் இன்றி இங்கே வந்தேன்; மீளவும் நிர்வாணமாவேன், ஏனெனில் லோகத்தில் யாவும் விட்டுச் சாவேன்.
3. ஆஸ்தி ஜீவன் தேகம் ரத்தம் தம்பிரான் கையில் நான்; ஈவாய்ப் பெற்ற தத்தம்; அவர் மீளவும் எடுத்தும், பாக்கியம்; என் மனம் தோத்திரஞ் செலுத்தும்
4. மா சுமை என் முதுகுக்கு வரவே, நெஞ்சிலே துக்கம் என்னத்துக்கு; அதை வரப்பண்ணுங் கர்த்தர் தயவாய் லேசுமாய் நீக்கவுஞ் சமர்த்தர்.
5. பல இன்பத்தை இம்மட்டும் தந்தாரே; வாழிந்தேனே, துன்பமும் வரட்டும். அவர் தண்டனைகள் சாது; அவர் கை அத்துணைக் கூர்மையாய் வெட்டாது.
6. சரச நகைப்பைப் பேயும் லோகமும் காட்டியும், வேறே என்ன செய்யும்; சரசங்களைப் பண்ணட்டும், தெய்வக் கை சிறுமை வந்தபின் உயர்த்தும்.
7. கிறிஸ்தவன் துன்னாளுக்காகப் பயமும் திகிலும் அற்றிருப்பானாக; சாவுக்கும் அஞ்சாதிருக்கும் வீரமும் ஆண்மையும் அவனுக்கடுக்கும்.
8. எந்தச் சாவு நம்மைக் கொல்லும், சாவெனில் மோட்சத்தில் நம்மை வரச் சொல்லும்; சாவில் எந்தத் துன்பத்துக்கும் தெய்வக் கை ஆவியைத் தப்புவித் தெடுக்கும்.
9. அங்கே பூரிப்பாய்க் கெலிப்பேன், நோவின் பின் வானத்தின் மேன்மையைத் தரிப்பேன். இங்கே மெய்ப்பொருள் காணாது, உலக வாழ்வான வேஷங்கள் நில்லாது.
10. சகல பூலோக நன்றும் மண் அல்லோ; நெஞ்சுக்கோ துக்கம் உண்டு பண்ணும்; அங்கே, அங்கே, என்றென்றைக்கும் உத்தம, இனிய நன்மைகள் கிடைக்கும்.
11. பரதீசின் எஜமானே, இப்போதும் என்றைக்கும் நீர் என் செல்வந்தானே; உம்முடையோன் நான், நீர் தாமே எனக்காய்த் தயவாய் மாண்டமீட்பராமே.
12. என்னுடையோர் நீர், கர்த்தாவே, உம்மையே நெஞ்சிலே பற்றிநேன், பத்தாவே. என்னைச் சாரும்போதன்பாக மோட்சத்து வாழ்வுக்கு நீர் அழைப்பீராக.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal