எல்லாம் கர்த்தாவின்கைக்கும்
ellaam karthaavingaikkum
1. எல்லாம் கர்த்தாவின்கைக்கும் தெய்வீக ஆளுகைக்கும் நான் ஒப்புவிக்கிறேன்; அவர் வழி காட்டாமல் அவர் ஜெயந்தராமல் போனால், வாய்க்கா தென்றறிவேன்.
2. நான் என்னதான் செய்தாலும், நான் கவலைப்பட்டாலும், அத்தாலே ஆகுமோ, என் செய்தியைத் தப்பற்ற விசாரிப்பாய் நடத்த பிதா இருக்கிறாரல்லோ
3. எக்காரியத்திலேயும் என் நன்மைக்கவர் செய்யும் செயல் நிலைக்குமே; ஆகையினாலே நித்தம் அவருடைய சித்தம் நடந்தால், பாக்கியமாமே
4. எல்லா இரக்கத்தோடும் இக்கட்டை நீக்கிப்போடும் கர்த்தாவை நம்புவேன்; நான் தெய்வ பக்தியாக நடந்தால், சுகமாக இருப்பேன், கைவிடப்படேன்.
5. என் பாவங்களுடைய கணக்கெல்லாம் மறைய விண்ணப்பம் பண்ணினேன், என் ரட்சகரினாலே மன்னிப்புண்டாகையாலே பிழைத்துக் கொண்டிருக்கிறேன்.
6. படுக்க நான் போனாலும், நான் வேலையைச்செய்தாலும் அந்தப் பாடுகள் என்மேல் இறங்கினாலும், நான் அவதிப்பட்டாலும், கர்த்தாவின் சொல்என் ஆறுதல்.
7. நான் நன்மையில் வளர சுமை என்மேல் சுமர வந்தால் வரட்டுமேன்; என் மேலே வரும் பாரம் தெய்வீக உபகாரம் என்றெண்ணிக் கொண்டுதாங்குவேன்
8. உயிருடன் வைத்தாலும், இனி வைக்காவிட்டாலும், நான் நல்லதே என்பேன், என் பயணம் முடியும் நாள் ஸ்வாமிக்குத் தெரியும். எப்போதும் ஆயத்தமாவேன்.
9. இதோ, என் ஆத்துமாவே, நீ நம்பினோர் கர்த்தாவே; பயம் இனி வேண்டாம். நீ அவர் கைக்குள்ளாக இரு அப்போ நன்றாக முடிந்து போகுமே எல்லாம்
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal