ஆகதவனின் சாவை நாம்
aagadhavanin saavai naam
1. ஆகாதவனின் சாவை நாம் விரும்போம், அவன் பாவமா வழியை விட்டு நம்மண்டை மனந்திரும்பி வாழ்வதை விரும்புவோம் என்றாண்டவர் மா ஆணையோடே சொன்னவர்.
2. மனிதனே, இவ்வார்த்தையை உன் மனத்தாபத்தில் நினை; அமிழாதே, இங்குனக்கே நல்லாறுதல் கிடைக்குமே; நொறுங்குண்டோரை ஸ்வாமி யார் அன்பாகப்பார்ப்போம் என்கிறார்.
3. ஆனாலும் உன் நினைவிலே நீ நிர்விசாரனாகாதே; நெடுநாள் இருக்கின்றது, நான் இங்கே நன்றாய்ப் பூரித்து இருந்தும், கடைசியிலே மன்னிப்படைவேன் என்காதே.
4. மெய்தான், கர்த்தாவின் தயவு பெரியதாக உள்ளது; இதோ, விசாரமின்றியே அந்த நினைவின்பேரிலே பொல்லாப்புச் செய்யும் மனிதன் கோபாக்கினைக் குள்ளானவன்.
5. சுதனுக்காகத் தயவு நாம் செய்வோம் என்றோர் உன்க்கு; “நீ சாவாய் உயிருடனே இருப்பாய்” என்றதில்லையே; நீ சாவாய் என்ற்றிகிறாய், எப்போதோ என்றறிந்திராய்.
6. இப்போ குணப்படு; இப்போ, ஆங்காலம்; நாளை என்னவோ; இப்போ சுகித்தோரில் சிலர் ஓர் வாரம் போனால் போனவர்; ஐயோ குணப்படாதோனாய் நீ செத்தால், வாதைக்குள்ளாவாய்.
7. ஆ, இயேசு ஸ்வாமி, மரணம் அணுகுமுன்னே சீக்கிரம் நான் உம்மண்டைக்குச் சேரநீர் சகாயம் பண்ணக்கடவீர்; நான் சாவுக்கின்றும் என்றைக்கும், ஆயத்தமாயிருக்கவும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal