ஆ பிதா குமாரன் ஆவி
aa pidhaa kumaaran aavi
1. ஆ, பிதா குமாரன் ஆவி, விண் மண் உலகை எல்லாம் தாங்குஞ் சருவ வியாபி உம்மால் ராப் பகலுமாம், உம்மால் சூரியன் நிலா ஓடுமே; தயாபரா.
2. சாத்தான் தீவினை வீணாக, என்னைப்போன ராவிலே தேவரீர் மா தயவாகக் கேடுந் தீதுமின்றியே காத்தற்கென் மனது தேவரீரைப் போற்றுது.
3. ராப்போனாற்போல் பாவராவும் போகப் பண்ணும், கர்த்தரே; அந்தகாரம் சாபம் யாவும் நீங்க, உம்மை இயேசுவே, அண்டிக்கொண்டு நோக்கினேன் உம்மால் சீர்ப் பொருந்துவேன்.
4. ஞாயத்தீர்ப்பில் திகிலற்று நிற்க, இன்றென் நெஞ்சிலும் வெண்ணுடை உடுத்தப்பட்டு, பயத்தோடே நித்தகமும் என் ரட்சிப்பைத் தேட, நீர் ஈவளிக்கக் கடவீர்.
5. வேதங் காண்பிக்கும் வழியில் என்னை நீர் நடப்பியும், இன்றைக்கும் ஒவ்வோரடியில் என்னை ஆதரித்திரும், எனக்கு நீர் மாத்திரம் பத்திர அடைக்கலம்.
6. தேகம் ஆவி என்னிலுள்ள சிந்தை புத்தி யாவையும் ஸ்வாமி, உமதுண்மையுள்ள கைக்கும் ஆதரிப்புக்கும் ஒப்புவிப்பேன், என்னை நீர் பிள்ளையாக நோக்குவீர்.
7. வானதூதர்கள் அன்பாக என்னைப் பேயின்கண்ணிக்குத் தப்புவிக்கவும், நேராகக் கடைசியில் மோட்சத்து வாழ்வில் கொண்டு போகவும் தயவாகக் கற்பியும்.
8. என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் ஆ, த்ரியேக வஸ்துவே, என்மனுக்காமென்றுசொல்லும், வேண்டிக்கொள்ளச் சொன்னீரே ஆமேன், உமக்கென்றைக்கும் தோத்திரம் புகழ்ச்சியும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal