ஆ இன்ப இல்லமே
aa inba illamae
1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க; அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க.
2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம் சுகம் தழைக்க; உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய; பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க.
3. ஆ இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில் ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று; துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில் அன்றும் அவரைக் கொண்டாடு.
4. ஆ இன்ப இல்லமே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு; அன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்; இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal