வஞ்சகன் வலை
vanjagan valai
வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2 வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு விதையை அறியாமல் அதை பொறுக்குவாரும் உண்டு – 2
1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2
2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2
3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில் இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும் இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும் இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல சபையை மாற்றிவிடும் முறைகளையும் வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .