யூதாவே நீ எழுந்து
yoodhaavae nee ezhundhu
யூதாவே நீ எழுந்து வா கர்த்தர் நம்மோடு இருக்கிறார் தேசத்தை அவர் நமக்கு தந்தார் துதி செய்து கலக்கிடுவோம்-2
எழுந்து வா நீ எழுந்து வா துதி செய்ய நீ எழுந்து வா எழுந்து வா நீ எழுந்து வா தேசத்தை கலக்கிடுவோம்-2
1.துதி செய்ய தொடங்கும் போதும் எரிகோ கோட்டை உடைந்ததே துதி செய்ய தொடங்கினால் போதும் சாத்தான் கோட்டை உடையுமே-2
அந்தகார சங்கிலி அறுக்கவே உன்னையும் என்னையும் அழைக்கிறார் கட்டுண்ட மக்களை விடுதலையாக்கிட உன்னையும் என்னையும் அழைக்கிறார்-எழுந்து வா
2.துதி செய்ய தொடங்கும் போதும் அஸ்திபாரங்கள் அசைந்ததே துதி செய்ய தொடங்கினால் போதும் எதிரி வெட்டுண்டு மடிவானே-2
உன்னையும் என்னையும் காக்கவே தம் தூதரை அவர் அனுப்புவார் உன்னையும் என்னையும் தொடுபவன் அவர் கண்மணியை தொடுகிறான்-எழுந்து வா