யூபிலி வந்தாயிற்று
yoobili vandhaayitru
யூபிலி வந்தாயிற்று யூபிலி வந்தாயிற்று மீட்பர் யேகோவா ராஜாவாய் மகிமை நீதியோடு ஆளும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
யூபிலி வந்தாயிற்று கிறிஸ்து முழுமையாய் பாவ நிவிர்த்தி முடித்த செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
யூபிலி வந்தாயிற்று பாவ அடிமைத்தளை தகர்த்து எறியப்படும் விடுதலை செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
யூபிலி வந்தாயிற்று மீட்கப்பட்ட பாவிகள் வீடு திரும்பிடவே அழைக்கும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
யூபிலி வந்தாயிற்று இழந்த உரிமையெல்லாம் யேகோவாவின் கிரயத்தால் திரும்பிடும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
யூபிலி வந்தாயிற்று ராவில் நிலைத்த கண்ணீர் யாவும் துடைக்கப்படும் ரட்சிப்பின் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
யூபிலி வந்தாயிற்று பரம எல்லையெங்கும் சர்வ ஜனங்களுக்கும் உயிரூட்டும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
யூபிலி வந்தாயிற்று பரம கிருபையால் தேவ ஐக்கியத்தை பெற்றிடும் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)
யூபிலி வந்தாயிற்று ஏழாம் எக்காளம் இன்றும் தொனிக்கிறது சந்தோஷச் செய்தியை எக்காளம் ஊதுங்கள் (4)