யேசுவுக்கே நில்லும் சிலுவை வீரர்காள்
yesuvukke nillum siluvai veerargaal
1. யேசுவுக்கே நில்லும் சிலுவை வீரர்காள்! துகிற் கொடி விரித்து போராட்டம் பண்ணுங்கள் எல்லோருக்கும் முன்பாக யேசு தாமே போவார் யுத்தத்தில் ஜெயம் பெற நம்மை நடத்துவார்.
2. யேசுவுக்காக நில்லும் அவர் இல்லாமலே போர்க் களத்தில் வீணாக முயற்சி செய்வோமே திவ்விய ஆயுதத்தைத் தரித்துக் கொள்ளுங்கள் அவர் போகுமிடத்தில் எங்கும் பின் செல்லுங்கள்.
3. யேசுவுக்காக நில்லும் அவர் சொல் கேளுங்கள் எதைக் கற்பிக்கிறாரோ அதையே செய்யுங்கள் பகைஞருக்குப் பெலன் பெரிது என்றாலும் தைர்யம் விடாதேயுங்கள் ஜெயம் பெறுவீரே.
4. யேசுவுக்காக நில்லும் யுத்தம் சுருக்கந்தான் இன்றைக்கு ஆரவாரம் நாளைக்கு வெற்றிதான் வென்றோனுக்குக் கிரீடம் கர்த்தர் கொடுப்பாரே சொல்லடங்கா ஆனந்தம் அவரால் ஆகுமே.