இயேசுவுக்காக நில்லும்
yesuvukkaaga nillum
இயேசுவுக்காக நில்லும் சிலுவை வீரரே அவரின் ராஜகொடி ஓங்கி உயர்த்துமே மாற்றாரை சர்வமாக அழிக்கும் வரையில் வெற்றிமேல் வெற்றிதந்து சேனைமுன் செல்கிறார்
இயேசுவுக்காக நில்லும் சிலுவை வீரரே அவரின் பெலன் சாரும் உன் பெலன் நம்பாதே உன் சொந்த ஆயுதங்கள் கைவிடுமே உன்னை தேவ சர்வாயுதத்தை அணிந்து போராடு
இயேசுவுக்காக நில்லும் சிலுவை வீரரே கடமையோ மோசமோ அழைக்கும் வேளையில் ஜெபத்தோடு விழிப்பாய் என்றும் நீ இருந்தால் அணுகா குறையேதும் கிறிஸ்து உன் கர்த்தரே
இயேசுவுக்காக நில்லும் போராட்டம் நீளாதே வெம்போரின் கோட்டம் ஜெய கீதமாய் மாறுமே மேற்கொள்ளும் வீரர் நித்ய ஜீவனை பெறுவார் விண்லோக ராஜாவின்கீழ் கூடி என்றும் வாழ்வார்