இயேசுவுடன் நான் நடப்பேன்
yesuvudan naan nadappen
இயேசுவுடன் நான் நடப்பேன் இனிய மொழி அவர் பேசுவார்
ஏனோக்கு நடந்தான் இயேசுவோடு எல்லையில்லா இன்பம் அடைந்தான் வழுவாது வாழ்க்கை வாழ்ந்திடுங்கால் வானூடே சென்றான் இயேசுவோடு
பலரோடு நானும் நடந்ததுண்டு புரியாத பாதையில் நடந்ததுண்டு சரியான பாதையில் நடந்திடவே சீராளன் இயேசுதான் வழியாம்
யாரோடு இன்று நீநடப்பதென்று போராடுகின்றாயோ உன் உள்ளத்தில் பாரோடு இன்னும் நீ நடப்பாயோ பரனோடு இன்று நீ நடப்பாயோ