இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன
yesuvodu serndhiruppadhenna
1. இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம் இயேசுவிற்காய் ஜீவப்பதோர் என்ன ஆனந்தம்
ஆசை என்றும் எந்தனகம் பெருகின்றதே ஆனந்தமாய் என்றும் வாழ வாஞ்சித்திடுதே – இயேசு
2.போக்கினார் என் பாவமெல்லாம் தாம் மரித்ததால் நீக்கினார் என் சாபபெமல்லாம் தாம் சுமந்தததால் எண்ணவே உம் சிநேகம் உள்ளில் பெருகிடுதே மன்னா உம் கூட வாழ என்று கூடுமோ – இயேசு
3.மாட்சிமிகும் நாட்டிலே நான் வாசம் செய்திட மாசிறந்த வீடெனக்காய் ஆயத்தமாக்க கைகளால் கட்டிடாததோர் நித்திய இராஜ்யமே கண்டிடவே ஆசையோடு காத்திருக்குதே – இயேசு
4. அன்று தீரும் எந்தன் கஷ்டம் லோக மண்ணிலே அன்று நீங்கும் எந்தன் துக்கம் யாவும் நிச்சயம் அன்று சுத்தர் நின்று ஒன்றாய் பாடி ஆர்க்கவே என்று அந்நாள் வந்து சேரும் எந்தன் இயேசுவே – இயேசு
5.நல்லவரே வல்லவரே பொன்னு காந்தனே அல்லல் தீர்க்க என்று வாறீர் ஆத்ம நேசரே எல்லையில்லா ஆனந்தமாய் வீணைகளேந்தி அல்லேலூயா கானம் பாடி வானில் வாழ்ந்திட – இயேசு