இயேசுவோடு இணைந்த வாழ்வினை
yesuvodu inaindha vaazhvinai
1. இயேசுவோடு இணைந்த வாழ்வினை தேடி தெரிந்துக் கொண்டேன் இதுவே தூய தேவ அன்பே – போதும் மாய உலகினிலே – போதும் தூய தேவ அன்பே
2. மனித அன்பு மாறி மறையும் மாறிடாத தேவ அன்பே இணையில்லாத நல்ல பங்கே இதற்கு நிகர் எதுவும் இல்லையே இம்மை மறுமையிலே – 2
3. பஞ்சமோ பசி பட்டயமோ மிஞ்சும் துன்பம் தொல்லை வந்தும் கிறிஸ்துவின் அன்பை விட்டென்றென்றும் பறித்துப் பிரித்திடாதே என்னையும் பரமன் கைவிடாரே – 2
4. உலக ஆசை பாவம் பெருக உண்மை நேர்மை எங்குமில்லை இதுனை காணும் நீதிமான்கள் இதயம் நொறுங்கிடுதே தினமும் கதறி ஜெபித்திடவே – 2
5. எனது ஆவி ஆத்மா தேகம் இயேசு சொந்தமாகக் கொண்டார் மரணமோ என் ஜீவனோ நான் மகிமை மேல் மகிமை அடைந்தே மகிபன் முகம் காண்பேன் – 2