இயேசுவின் வருகை சமீபமே
yesuvin varugai sameebamae
இயேசுவின் வருகை சமீபமே சந்திக்க ஆயத்தமா மணவாளன் வரும் வேளையிலே அழைக்க ஆயத்தமா
வாக்களித்தவர் வாக்கு மாறார் நிச்சயம் வந்திடுவார்
வானத்தின் சத்துவம் அசைகின்றதே வாக்குகள் நிறைவேற வானத்தின் மேகத்தில் வந்திடுவார் மானிடர் காண்பார்கள்
அன்பு அனேகரில் குறைந்திடுதே ஆண்டவர் வருகை யிதோ அக்கிரமம் மிகுந்து பெருகிடுதே மானிடர் மத்தியிலே
தூதர்களோடே வந்திடுவார் தூயவரைச் சேர்க்க மன்னன் மகிமை வருகையிலே மகிழ்ந்து சென்றிடுவோம்
மரித்தவர் முதலில் எழுந்திடுவார் மறுரூபமாகிடுவோம் மேகங்கள் மேலே சென்றிடுவோம் மேசியா இயேசு உடன்
மத்திய வானில் மகிழ்ந்திருக்க ஆயத்த மாகிடுவோம் ஆண்டவர் ஆட்சியில் அரசாள ஆனந்தம் கொண்டிடுவோம்