இயேசுவின் சிந்தையை
yesuvin sindhaiyai
இயேசுவின் சிந்தையைத் தரிப்போம் நேசமோடே வரன்பில் களிப்போம்
1.சுத்த இதயத்தை சுதந்திர மாக்கி நித்திய வாழ்வதை நினைவதிலாக்கி சத்தியவேதம் சர்வாயுத மாக்கி கர்த்தரைப் பார்த்து நடப்போம்
2.கஷ்டங்களெல்லாம் கர்த்தருக்காக நஷ்டமென்றே உணராதவராக கனமகிமை உண்டு பண்ணுவதற்காக மனமடிவின்றி நடப்போம்
3.பொறுமையில்லாதவர் முறுமுறுத்தாலும் உரிமையில்லை என வெறுத்து விட்டாலும் சிலுவையின் பாடுகள் சகித்தவர் போல சினமடையாது நடப்போம்
4.கள்ள சகோதரர் கலக்கிடும் போதும் சொல்லாதவைகளைச் சுமத்திடும் போதும் அல்லலின் மேல் அல்லல் அணுகிடும் போதும் சொல் தவறாது நடப்போம்
5.பதிலுக்குப் பதில் செய்யாமலிருந்து நிந்திப்பவர்க்காய் நிதமும் ஜெபித்து சபித்திடும் சத்துருக்களை ஆசீர்வதித்து பிதாவைப் போலாகக் கடவோம்
6.மூல உபதேசங்களைக் கடந்து உலகத்தின் வேஷத்தை மனமு வந்தறுத்து நலமெனக் காண்பதை நாடோறும் உணர்ந்து பூரணராகக் கடவோம்