இயேசுவின் பின்னாலே மண்ணாசைகளும்
yesuvin pinnaalae mannaasaigalum
இயேசுவின் பின்னாலே மண்ணாசைகளும் மாய்த்து நேசமுடன் போவோம் ஜோதியுயர் நாதனுடன் நீதியுடன் நின்றிடலாம் போவோம்
பரலோகம் விட்டுப் பாவிகள் மீதன்புற்றார் நரர் பலர் செல்ல நல் வழி திறந்திட்டார்
பரிசுத்தம் மார்க்கம் பரிசுத்தாவி தந்தார் பரலோகம் செல்ல பரனருள் தந்தார் மா அன்புடன்
பாவங்களை நீக்கிப் பரிகரிக்க என்னை பாவக் கோலமாகி பரனின் சுதன் தன்னை மாய்த்தனரே
பொய்யுலகம் வேண்டாம் இயேசையா எனக்கெல்லாம் தூயசாலேம் செல்வோம் இயேசையன்டி சென்றால் ஐயமின்றி
மனம் மாறிடாதோர் மரணமடைவாரே தினந்தோறும் தீயிற்றியங்கி அழுவாரே திரும்புவீர்
இருதய சுத்தம் இருந்திடில் நித்தம் இயேசு வரும் நாளில் நாம் வானிலொன்று கூடி வாழ்ந்திடலாம்