யேசுவின் பாதத்தருகே அவர் அருள்
yesuvin paadhatharugae avar arul
1. யேசுவின் பாதத்தருகே அவர் அருள் கேட்கிறேன் அன்றாட ஆனந்தப் பொன்னாள் என்றும் என்னைச் சந்திக்க யேசுவின் பாதத்தருகே சென்ற காலம் காண்கிறேன் அவர் அன்பே அருளாக என்னை முற்றும் வென்றதே.
2. மாந்தர் அருள் பெறுமிடம் தேவப் பாதத்தருகே பாவ துக்கம் சமர்ப்பித்தே இளைப்பாறல் பெறுவேன் யேசுவின் பாதமமர்ந்தே அழுது ஜெபிக்கிறேன் அவரது பூரணத்தின் தேவை யாவும் பெறுவேன்.
3. ஆசீர்வதியும் ரட்சகா பாதம் காத்திருக்கிறேன். அருட் கண்ணால் என்னைக் காணும் அருள் முகம் காண்பியும் சுத்த இதயம் அளித்தே முற்றும் பூரணமாக்கும் நீதியின் ஒளி யேசுவின் ப்ரசன்னத்தைப் பெறுவேன்.