யேசுவின் நற்செய்தி சொல்வீர்
yesuvin narseydhi solveer
1. யேசுவின் நற்செய்தி சொல்வீர் ஏழை என் நெஞ்சத்திலே உள்ளன்பு பொங்க நீர் சொல்வீர் சந்தோஷ செய்தி அதே! பாலனை வாழ்த்த விண்தூதர் கூடியே ஆர்ப்பரித்தார்! "விண்ணில் பிதாவுக்கே மேன்மை! பூமியில் சிநேகம்" என்றார்.
யேசுவின் நற்செய்தி சொல்வீர் ஏழை என் நெஞ்சத்திலே உள்ளன்பு பொங்க நீர் சொல்வீர் சந்தோஷ செய்தி அதே!
2. நாற்பது நாள் தீய காட்டில் சோதனையால் தவித்தார் படாத பாடுகள் பட்டார் சாத்தானையோ ஜெயித்தார் யாருக்கும் நன்மைகள் செய்து சுற்றியே திரிந்தனர் பாவிகளால் தள்ளப்பட்டு கஸ்திகள் அடைந்தனர்.
3. மீட்பர் தம் சிலுவை மீதில் தொங்கியே ஜீவன் விட்டார் உயிர்த்தெழுந்து மோட்ச வீட்டில் என்றும் வீற்றாளுகிறார் ஆ! இந்த அன்பே பேரன்பு! எந்தனை மீட்டுக் கொண்டார்! ராஜாதி ராஜனைப் போற்றும் அன்பின் சொரூபியானார்.