இயேசுவின் நாமத்தினால் ஒரு
yesuvin naamathinaal oru
இயேசுவின் நாமத்தினால் ஒரு அற்புதம் உனக்கு நடக்கும் இயேசுவின் நாமத்தினால் ஒரு புது வாழ்வு உனக்கு திறக்கும்
1. தூதர்கள் சேனை இறங்கும் ஒரு யுத்தம் உனக்காய் நடக்கும் (2) சிலுவையின் வெற்றி யாவும்- உன் சொந்தமாய் வந்து சேரும் (2)
2. சூழ்நிலை உனக்காய் மாறும் – நீ சந்தித்த தோல்விகள் மறையும் (2) சத்துருக் கோட்டை விழுந்திடும்- நீ ஜெபித்தது வந்து சேரும் (2)
3. மூடிய கதவு திறக்கும் முன் நிற்கும் தடைகள் விலகும் (2) இருளின் நாட்கள் நீங்கும் மாவெளிச்சம் உன்மேல் உதிக்கும் (2)
4. சகல வியாதியும் – இயேசு தழும்புகளால் மாறும் (2) பாவ நோய்கள் எல்லாம் – இயேசு இரத்தத்தால் நீங்கிடும் (2) – ஆமென்
5. தேவன் தந்த தரிசனம் – அவை நிச்சயம் நடந்தே தீரும் (2) கர்த்தரின் வாக்குத்தத்தம் – அது நிச்சயம் என்னை உயர்த்தும் (2) – ஆமென்