யேசுவின் நாமத்தில் இருவர் மூவர்
yesuvin naamathil iruvar moovar
1. யேசுவின் நாமத்தில் இருவர் மூவர் எவ்விடம் கூடினும் வருவேன் என்றீர் அந்நல் வாக்கை நம்பி அடியார் வந்தோம் வாரும் ஆசீர் தாரும் உம்மைக்காண்பியும். யேசு எங்களிடம் என்றும் பக்கமாய் வாரும் ஆசீர் தாரும் இந்த வேளையும்.
2. எங்களைச் சந்தித்தீர் சென்ற வேளையில் ரட்சகா வாருமே இத்தருணமும் உம் ப்ரசன்னம் தந்து அருள் காண்பித்து அனைவரும் செய்யும் ஜெபத்தைக்கேளும். யேசு எங்களிடம் என்றும் பக்கமாய் வாரும் ஆசீர் தாரும் இந்த வேளையும்.
3. துதியின் பாடல்கள் தொனிக்கச் செய்யும் எங்கள் விசுவாசம் வளரச் செய்யும் நம்பிக்கை செழித்து தூயன்பு தோன்றி எம்பாதை ஒளிர எம் ஜெபம் கேளும். யேசு எங்களிடம் என்றும் பக்கமாய் வாரும் ஆசீர் தாரும் இந்த வேளையும்.