இயேசுவின் நாமத்தில் அற்புதமே
yesuvin naamathil arpudhamae
இயேசுவின் நாமத்தில் அற்புதமே என்றும் நடந்திடுமே இயேசுவின் நாமத்தில் விடுதலையே இன்றும் நடந்திடுமே
அடைக்கப்பட்ட வாசல் திறந்திடுமே என் இயேசுவின் நாமத்திலே இயேசுவின் நாமத்தில் திறந்தால் அதை அடைக்கவும் முடியாதே
வியாதிகள் அனைத்தும் நீங்கிடுமே இயேசுவின் நாமத்திலே இயேசுவின் நாமத்தில் நீங்கிப் போனால் அது திரும்பவும் வந்திடாதே
வறுமைகள் அனைத்தும் நீங்கிடுமே இயேசுவின் நாமத்திலே ஆசீர்வாதம் பெருகிடுதே புது மகிழ்ச்சியும் பொங்கிடுமே
ஆயிரம் பேர் உன்னை எதிர்த்தாலும் அது உன்னை அணுகிடாதே இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவாய் அதை மிதித்தே நடந்திடுவாய்