இயேசுவின் நாமமே மேலானது
yesuvin naamamae melaanadhu
இயேசுவின் நாமமே மேலானது வானிலும் பூவிலும் உயர்வானது தேனிலும் இனிமையானது அது தேனிலும் மதுரமானது
1.பாவங்கள் பயங்கள் போக்கும் வல்ல நாமத்தை பாடப்பாட உள்ளம் மகிழுதே அருமையானது அன்பாலானது பாசமுள்ள இயேசு நாமமே
2.கோடி கோடி துதிகள் சொல்லிபாடி மகிழ்வோம் தேடி வந்த தெய்வ நாமத்தை புனிதமானது மகிமையானது போற்றிப் பாடும் இன்ப நாமத்தை
3.இன்னல் நீக்கி இன்பம் தரும் இனிய நாமத்தை ஊருக்கெல்லாம் சொல்லி மகிழ்வோம் மென்மையானது மேன்மையானது மாந்தர் போற்றும் மன்னன் நாமமே
4.அற்புதங்கள் அதிசயங்கள் செய்ய வல்லதே ஆற்றி தேற்றி அரவணைத்திடும் வழியுமான சத்தியமானது ஜீவனையே தந்த நாமமே
5.இந்த நாமத்தால் அநேகர் என்னை வெறுத்தாலும் தெம்பாக தினமும் பாடுவேன் ஆத்ம நண்பனே அன்பின் இரட்சகா உந்தன் நாமம் என்றும் வாழ்கவே