இயேசுவின் நாமமே
yesuvin naamamae
இயேசுவின் நாமமே! கிறிஸ்தேசுவின் நாமமே! வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும் உன்னதர் நாமமே!-இயேசு
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2
1. மாந்தர் போற்றும் நாமம் – விண் தூதர் வாழ்த்தும் நாமம் பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம் -இயேசுவின்
2. பாவம் போக்கும் நாமம் – தூய வாழ்வளிக்கும் நாமம் நித்திய ஜீவனருளும் ஈடில்லாத நாமம் – இயேசுவின்
3. பேய் நடுங்கும் நாமம் – கடும் நோய் அகற்றும் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம் -இயேசுவின்
4. இனிமை தங்கும் நாமம் – தீய இன்னல் மாற்றும் நாமம் இருளின் பயங்கள் நீக்கும் ஈடில்லா நாமமே -இயேசுவின்
5. சாவை வென்ற நாமம் – பாவ சாபம் போக்கும் நாமம் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமமே -இயேசுவின்