இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
yesuvin naamam vallamaiyulladhu
இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது வல்லமையுள்ளது, வல்லமையுள்ளது – 2
1. இயேசுவின் நாமத்தினால் இரண்டு மூன்று பேர்கள் கூடிடும் போது வந்திடுவாரே ஜெபத்தை கேட்பாரே – இயேசு
2. கேளுங்கள் கொடுக்கப்படும் இயேசு உரைக்கின்றார் எதைக் கேட்டாலும் பெறுவீர் நிறைவாய் இயேசுவின் நாமத்தினால் – இயேசு
3. வானத்தின் கீழ் எங்கும் பூமியின் மேலேயும் இரட்சிக்க வல்ல நாமம் வேறில்லை இயேசுவின் நாமமே – இயேசு
4. பூமியின் கீழானோர் யாவரின் முழங்கால்கள் முடங்கும் நாமம் அதிகாரமுள்ள இயேசுவின் நாமமே – இயேசு
5. சப்பாணி நடக்கச் செய்யும் குருடர் காண செய்யும் மரித்தோர் எழும்ப அற்புதம் செய்யும் இயேசுவின் நாமமே- இயேசு
6. சாத்தான் எதிர்த்தாலும் சதி பல செய்திட்டாலும் சாத்தானை மேற்கொள்ள வல்லமை தந்திடும் இயேசுவின் நாமமே – இயேசு