இயேசுவின் நாமம் பாடிட வேண்டும்
yesuvin naamam paadida vendum
இயேசுவின் நாமம் பாடிட வேண்டும் காலையும் கண் துயில் வேளையிலும் இன்பம் துன்பம் நேர்ந்திடும் போதும் இயேசுவின் பாதம் தேடிட வேண்டும்
மலரின் மணமும் இரவின் நிலவும் உலகில் தோன்றும் அன்பும் அழகும் - 2 இறைவன் படைத்தார் எனவே உணர்ந்தேன் அவர் பாதம் என்றும் போற்றிட வேண்டும் - 2
மனதில் நிறைவும் மகிழ்வும் பொங்கும் அன்பின் தூய ஆவியே தங்கும் - 2 பாவங்கள் நீங்கும் பேரொளி வீசும் மோட்ச வாசல் என்னுயிர் சேரும் - 2