இயேசுவின் நாமம் ஓங்கிடவே
yesuvin naamam ongidavae
இயேசுவின் நாமம் ஓங்கிடவே நேசமுடன் புகழ் பாடிடுவோம் காசினியில் நிகர் வேறதற்கில்லை தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம்
வானமும் பூமியும் யாவையுமே வார்த்தையினால் உண்டாக்கினவர் என்னை மண்ணென்று நினைவாக்கினவர் எனக்கென்றும் சொந்தமவர்
அற்புதமாம் அதிசயமாம் ஆண்டவர் இயேசுவின் நாமமதே பேய் நடுங்கும் கடும் நோய் அகலும் நல் பேர் புகழ் ஓங்கிடும் நாமமதே
வாழ்ந்திடும் வானோர் பூதலத்தோர் வாழ்த்தி வணங்கிடும் நாமமதே மானிடரின் முழங்கால் முடங்கும் மெய் மேன்மை உயர் திரு நாமமதே
சாவு பயங்கள் நீங்கிடவே சத்துருமேல் ஜெயம் பெற்றிடவே சோதனையில் பல வேதனையில் என் சொந்த அடைக்கல நாமமதே
வந்துன்னைச் சேர்ப்பேனென்றுரைத்த வல்ல கிறிஸ்தேசுவின் நாமமதே நீடுழியாய் நித்ய ராஜ்யத்திலே -தம் நாமமதை நான் போற்றிடுவேன்
Related songs
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆச்சர்யமே அதிசயமேaaccharyamae adhisayamaeSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிaanandha geedhangal ennaalum paadiSis. Saral Navoriji
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal