இயேசுவின் நாமம் மதுரம்
yesuvin naamam madhuram
இயேசுவின் நாமம் மதுரம் முழு இதயத்தால் தொழுதோம் நாமும
வானாதி வானம் அதிரும் வல்ல பேய்களை வெல்லும் நல் நாமம் கோனாய் விளங்கும் நாமம் - எங்கள் குரு இயேசு நாதனையே கும்பிடுவோம் நாமும்
வல்லமையுள்ள நாமம் - அருள் சொல் தந்த அன்பரின் நாமம் கொல்கொதா வென்ற நாமம் - மாந்தர் கோரங்கள் ரோகங்கள் மாற்றிடும் நாமம்
அதிசயமான நாமம் - நல்ல ஆலோசனை தரும் நாமம் நித்திய பிதா என்ற நாமம் - சுத்த நீதியில் நடத்திடும் சமாதான நாமம்
பரிசுத்தர் என்ற நாமம் இயேசு கிறிஸ்துவாய் உதித்த நாமம் கர்த்தராய் காக்கும் நாமம் - உண்மை பக்தர்கள் போற்றிடும் மேசியா நாமம்