இயேசுவின் நாமம் என் ஜீவனை
yesuvin naamam en jeevanai
இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் ஆட்டுக்குட்டி இரத்தம் என் வீட்டின் முத்திரை
மறைந்து வரும் கொள்ளை நோய்களுக்கும் பயப்படேனே நான் பயப்படேனே
வியாதி பயம் மரண பயம் இயேசுவின் நாமத்தில் நீங்கிடட்டும்
பொல்லாப்பு எனக்கு நேரிடாது வாதை என் கூடாரத்தை அணுகிடாது
பரலோக சேனையின் காவலுண்டு சர்வ வல்ல தேவனின் கிருபையுண்டு
உயர்த்திடுவோம் இயேசு நாமத்தையே மறந்திடுவோம் நோயின் பெயர்களையே