இயேசுவின் மார்பினில் சாய்ந்திடும்
yesuvin maarbinil saayndhidum
இயேசுவின் மார்பினில் சாய்ந்திடும் எனக்கு சஞ்சலம் எதுவுமில்லை நெஞ்சம் அணைத்தார் முத்தங்கள் கொடுத்தார் நேசத்தால் இழுத்துக் கொண்டார்
ஒப்பில்லா அன்பை ஒப்பிட்டுக் கூற ஒன்றும் ஈடு இல்லை ஒயாமல் பாடுசென்னா பாடு ஒன்றும் ஈடு இல்லை
இரட்டுடை எடுத்தார் கட்டுகள் அறுத்தார் ஒன்றுக்கும் கவலையில்லை ஓயாமல் பாடு ஒசன்னா பாடு ஒன்றுக்கும் கவலையில்லை
கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது கலக்கம் தேவையில்லை ஓயாமல் பாடு ஒசன்னா பாடு கலக்கம் தேவையில்லை
கர்த்தருக்குள்ளாய் மகிழ்ந்திருப்பார்க்கு வருத்தம் எதுவுமில்லை ஓயாமல் பாடு ஓசன்னா பாடு வருத்தம் எதுவுமில்லை