யேசுவின் கையே காவல் யேசு நல்
yesuvin kaiyae kaaval yesu nal
1. யேசுவின் கையே காவல் யேசு நல் மார்பிலே என் ஆவி அவர் அன்பால் இன்ப நித்ரை செய்யும் கேள்! தூதர் பாடும் சத்தம் ஜோதி நாட்டினின்று முத்துக் கடல் விட்டோடி எளன் கீதம் கொண்டேகி. யேசுவின் கையே காவல் யேசு நல் மார்பிலே என் ஆவி அவர் அன்பால் இன்ப நித்ரை செய்யும்.
2. யேசுவின் கையே காவல் கொல்லும் கவலையும் சோதனைகளும் நீங்கும் பாவம் வராதங்கே மா விசாரம் சந்தேகம் பயமோ அங்கில்லை; இன்னும் கொஞ்சம் இக்கட்டு கொஞ்சம் கண்ணீர் இங்கே. யேசுவின் கையே காவல் யேசு நல் மார்பிலே என் ஆவி அவர் அன்பால் இன்ப நித்ரை செய்யும்.
3. யேசு என் ஆத்ம தஞ்சம் எனக்காய் மரித்தார்; பிளவுண்ட மலைமேல் என்றும் நான் நம்புவேன். இங்கே பொறுமையோடு ராவோ சென்று காலை பொன் நகரில் உதிக்கும் மட்டும் காத்திருப்பேன். யேசுவின் கையே காவல் யேசு நல் மார்பிலே என் ஆவி அவர் அன்பால் இன்ப நித்ரை செய்யும்.