இயேசுவின் இருதயமே
yesuvin irudhayamae
இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள் மயமே உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே
இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கமுண்டு - என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு
கடவுளின் கருணை உண்டு - அந்த கருணைக்கு உருவம் உண்டு - அவர் உருவத்தில் உதித்தெழும் உயிர் அதனால் எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு