இயேசுவின் இரத்தத்தாலும்
yesuvin irathathaalum
இயேசுவின் இரத்தத்தாலும் தேவனின் கிருபையாலும் மீட்கப்பட்டோர்கள் ஆனந்தம் பாடி ஆண்டவருடன் சேருவார்
1. மேகத்தில் எக்காளமே – இயேசு வருகையில் தொனித்திடுமே அன்பருடன் அவர் பக்தர் பலர் ஆயத்தமாய் வருவார் – இயேசுவின்
2. அத்தி மரம் துளிர்க்குதே – அந்த புத்திரர் இஸ்ரவேலர் பத்திரமாக கூடிச் சேர – வேத சத்தியம் நிறைவேறுதே – இயேசுவின்
3. ஜொலிக்கும் நட்சத்திரங்கள் – பல வீழ்கின்ற நாளிதுவே பாவத்தை வெறுத்து பயத்தோடே ஜீவித்து இயேசுவை பின் செல்லுவோம் – இயேசுவின்
4. தூதனின் கரங்களில் – ஓர் கோப கலசத்தைப் பார் ஐயோ என்றொரு தொனி கேட்குதே ஐங்கண்டங்கள் எங்குமே – இயேசுவின்
5. காலம் இனி செல்லாதே – கர்த்தர் இயேசு வருகின்றாரே ஆவியும் அவர் மணவாட்டியும் கூவி அழைத்திடுவார் – இயேசுவின்